குற்றாலம் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.
இது சிற்றாறு, மணிமுத்தறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.
பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.