AirDroid, a fast & free app that lets you wirelessly manage your Android device from a web browser: http://goo.gl/TPnBJ
இனியஉலா بسم الله الرحمن الرحيم
இனியஉலாவில் சுற்றுலா தலங்கள் மேப் பயணக்குறிப்புகள்
ஞாயிறு, 7 அக்டோபர், 2012
செவ்வாய், 12 அக்டோபர், 2010
சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

வ.எண் | சரணாலயத்தின் பெயர் | மாவட்டத்தின் பெயர் |
1. | முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா | நீலகிரி |
2. | கலக்காடு - முண்டந்துரை புலிகள் சரணாலயம் | திருநெல்வேலி |
3. | வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | காஞ்சிபுரம் |
4. | பாயிண்ட் கேளிமர் வனவிலங்கு சரணாலயம் | நாகப்பட்டிணம் |
5. | கிண்டி தேசிய பூங்கா | சென்னை |
6. | இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா | கோவை |
7. | கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் | கன்னியாகுமரி |
8. | வேட்டன்குடி பறவைகள் சரணாலயம் | சிவகங்கை |
9. | முக்குரித்தி தேசிய பூங்கா | நீலகிரி |
10. | பூலிகட் லேக் பறவைகள் சரணாலயம் | திருவள்ளூர் |
11. | கிரிஸ்சல்ட் ஜெயிண்ட் அணில்கள் சரணாலயம், ‚வில்லிப்புத்தூர் | விருதுநகர் |
12. | கரிகிளி பறவைகள் சரணாலயம் | காஞ்சிபுரம் |
13. | கஞ்சிரன்குளம் பறவைகள் சரணாலயம் | இராமநாதபுரம் |
14. | வல்லநாடு கருப்பு மான் (பிளாக்பக்) சரணாலயம் | தூத்துக்குடி |
15. | மன்னார் வளைகுடா கடல் சார்ந்த தேசிய பூங்கா மற்றும் உயிர்கோள சரணாலயம் | மன்னார் வளைகுடா, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் |
16. | உதயமத்தண்டபுரம் பறவைகள் சரணாலயம் | திருவாரூர் |
17. | அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா | சென்னை |
18. | கரைவெட்டி பறவைகள் சரணாலயம் | பெரம்பலூர் |
19. | வுடுவூர் பறவைகள் சரணாலயம் | திருவாரூர் |
20. | சித்ரநுடி பறவைகள் சரணாலயம் | இராமநாதபுரம் |
21. | குந்தன்குளம் பறவைகள் சரணாலயம் | திருநெல்வேலி |
22. | வெள்ளோடு பறவைகள் சரணாலயம் | ஈரோடு |
23. | மேல் செலவனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம் | இராமநாதபுரம் |
24. | திருப்படைமருதூர் பாதுகாப்புச் சரணாலயம் | திருநெல்வேலி |
ஞாயிறு, 22 மார்ச், 2009
குமரி மாவட்ட கோட்டைகள்
கன்னியாகுமரி

பரப்பளவு - 4,433 சதுர கி.மீட்டர்சென்னையிலிருந்து 700 கி.மீட்டர் தூரம்மாவட்டத்தலைநகரம்- நாகர்கோயில்இயற்கை எழில் கொஞ்சும் இந்தியாவின் கடைக்கோடி மாவட்டம். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிப்பது இதன் சிறப்பு. தமிழ்நாடு, கேரளா இரு மாநில எல்லையில் இருப்பதால் மொழி, உணவு, உடை என எல்லாவற்றிலும் இரு மாநில பாதிப்புகளையும் காண முடியும். குமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் குறித்து காண்போம்.குமரி அம்மன் ஆலயம்கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.கன்னியாகுமரிக்கு சென்னையில் இருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் செல்லலாம். பேருந்து, ரயில் நிலையங்கள் கோயில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. தங்குவதற்கும் ஏராளமான விடுதிகள் உள்ளன.காலை சூரிய உதயத்தையும், மாலையில் சூரியன் மறைவதையும் காண்பதற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதைத் தெளிவாக காண்பதற்கு சுற்றுலாத்துறை சார்பில் காட்சிப் கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.விவேகானந்தர் மண்டபம்கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். சிகாகோ உரையை முடித்துக்கொண்டு விவேகானந்தர் இங்குதான் தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது.திருவள்ளுவர் சிலைகன்னியாகுமரி கடலில் மையப்பகுதியில் கம்பீரமாய் நிறுவப்பட்டிருக்கிறது இந்த திருவள்ளுவர் சிலை. திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.காந்தி நினைவு மண்டபம்மகாத்மா காந்தியடிகளின் நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பு.அரசு பழத்தோட்டம்கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அரசு பழத்தோட்டம். விதவிதமான பழங்கள், வெளிநாட்டுச் செடிகள், பழமையான மரங்கள் என பலவற்றை இங்கு காணலாம். காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலும் இந்தத் தோட்டத்தை பார்வையிடலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.வட்டக்கோட்டைகுமரியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் 5 கி..மீட்டர் தூரத்தில் வங்கக் கடற்கரையோரம் அமைந்திருக்கிறது வட்டக்கோட்டை.இருபத்து ஒன்பது அடி உயரத்தில் மூன்றரை ஏக்கர் பரப்பில் உள்ள இக்கோட்டையின் மேற்பகுதியில் துப்பாக்கி மற்றும் பீரங்கியால் சுடுவதற்கு இடைவெளிகள் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு மற்றும் சிலப்பதிகாரத்தில் இப்பகுதியில் துறைமுகம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.மேலும் முத்து குளிக்கும் பணிகளும் நடைபெற்று வந்துள்ளது. இத்தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக கடற்கரையை அடுத்த லீ புரம் என்னும் பகுதியில் கலங்கரை விளக்கம் இருந்த தடயம் இன்னும் உள்ளது.பே வாட்ச் தீம் பார்க்கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் பாதையில் இரண்டு கீலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பே வாட்ச். பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பு. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. காலல 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மாத்தூர் தொட்டில்பாலம்
நாகர்கோவிலில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள்சிதறால்கன்னியாகுமரியில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் சிதறால் மலைக்கோயில் அமைந்துள்ளது. சமணத்துறவிகள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த சமணக்கோவில் அமைந்துள்ளது. சமணத் தீர்த்தங்கரர்களின் நினைவாக இந்தியாவில் உள்ள சமணக்கோவில்களில் முக்கியமானது இது. மலைமேல் 3 கி.மீ.நடந்து சென்றால் வேலைப்பாடுகள் மிகுந்த சமணச்சிற்பங்களை காணலாம்.மலைமேல் இருந்து சுற்றிலும் இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக பேருந்து மூலமோ, கார் மூலமோ சிதறாலை அடையலாம். நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.கேரளபுரம்நாகர்கோவிலில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலை அருகே அமைந்துள்ளது கேரளபுரம் அதிசய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் கறுப்பு நிறத்திலும், ஆறு மாதங்கள் வெள்ளை நிறத்திலும் விநாயகர் இருப்பது இக்கோயிலின் சிறப்பு. கோவிலின் கிணறும் அதே நிறங்களை பிரதிபலிப்பது கூடுதல் சிறப்பு.மாத்தூர் தொட்டில்பாலம்மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.1971 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலமாகும். இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.புனித தோமையர்இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அப்போஸ்தலர் என்னும் புனித தோமா. இயேசுவின் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தோமா இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. 52-23 ம் நூற்றாண்டுகளில் பஞ்சாப் வழியாக கேரளா வந்த அவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் மாதா ஆலயத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.ஆலயம் எழுப்பப்படும் காலங்களில் அவர் திருவிதாங்கோடு செல்லும் வழியில் உள்ள கஞ்சிக்குழி என்னும் இடத்தில் மலைக்குகையில் தங்கியிருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக மாதாமலை என்று அழைக்கப்படும் இந்த மலையின் அடிவாரத்தில் பெரிய குகை ஒன்று இன்றும் காணப்படுகிறது. இந்த மலையின் மேலே பாறையில் காணப்படும் காலடித்தடம் தோமாவுடையது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.நாகர்கோவில் இருந்து கருங்கல் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் தோமையர் மலையை அடையலாம்.மகாதேவர் கோவில்குமரி மாவட்டத்தின் தென்கோடியில் வைக்கல்லூர் எனும் ஊரில் காணப்பட்ட மணல் மேடுகளின் உட்பகுதியில் புதையுண்டு கிடந்து எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயம்.பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னர்களால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்கரை அருகில் இருப்பதால் கடல் கொந்தளிப்பால் மணலால் மூடப்பட்டு பின்னர் 1922-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.கருங்கற்களினால் கட்டப்பட்ட இக்கோவிலின் உட்பகுதியில் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறைந்த நந்தி ஒன்று காணப்படுகிறது. சுற்றியுள்ள பலப் பகுதிகளில் இருந்து ஏராளமான பல பக்தர்கள் தற்போது இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.பேச்சிப்பாறை அணைகுமரி மாவட்ட விவசாயம் இந்த அணையை நம்பித்தான் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது. எந்தப் பருவ நிலையிலும் வற்றாதது இந்த அணை. குழந்தைகளோடு சென்றுவர மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகவும் இது விளங்குகிறது. சமீபத்தில் இங்கு படகுப்போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.திற்பரப்பு அருவிகன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. எல்லாக் காலநிலையிலும் இந்த அருவியில் தண்ணீர் இருப்பது இதன் சிறப்பு. இந்தப் பகுதி முழுவதும் பச்சைப்பசேலென்று கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் திற்பரப்பு செல்லலாம். நாகர்கோவிலில் இருந்து திருவட்டார் அல்லது குலசேகரம் சென்று அங்கிருந்து பேருந்து மூலமும் திற்பரப்பு அருவியை அடையலாம்.திருவட்டார்கன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஆயிரம் தூண்களும் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 63 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றது இந்தக் கோயில். கோயிலின் உட்புறத்தில் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பச்சிலையை கொண்டு வரையப்பட்டவை. பல நூறு வருடங்களைக் கடந்தும் இந்த ஓவியங்கள் புதிதாக காட்சியளிப்பது இன்னும் சிறப்பு.வெள்ளிமலைநாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளிமலை முருகன் கோவில். குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு செல்ல மலைமீது 300 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குகையில் தான் வள்ளியை முருகன் மணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. நாகர்கோவிலில் இருந்து தொடர்ச்சியாக தக்கலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
செவ்வாய், 10 பிப்ரவரி, 2009
குற்றாலம் அருவி
இது சிற்றாறு, மணிமுத்தறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.
பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.